Powered By Blogger

Wednesday, August 31, 2011

வீடுகளுக்கு `ஏ.சி.’ தேவையில்லை


Click to show "Isaac Newton" result 8புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்து மக்களுக்கு அறிவியலின் மீது ஈர்ப்பை உண்டாக-செய்தவர் சர் ஐசக் நியூட்டன்(1642 - 1727).

சர் ஐசக் நியூட்டன் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் நாள் அன்று பிறந்தவர். மத எதிர்ப்புகளுக்கு பயந்து பல கண்டுபிடிப்புகளை வெளியிட அஞ்சியவர் . பலதுறைகளில் ஆழ்ந்த அறிவை கொண்டவர். இவரது ஒளி-இயல்பு-ஆராய்ச்சியில் உருவாக்கிய 'பிரதிபலிப்பு

வீடுகளுக்கு `ஏ.சி.’ தேவையில்லை


வீடுகளுக்கு இனி ஏ.சி. வசதி செய்ய வேண்டாம். வெயிலுக்கும், குளிருக்கும் ஏற்ப வீட்டை இதமாக வைத்திருக்கும் கூரைத் தளஓடுகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்க ஆய்வாளர்கள் தளஓடுகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர். பெரிய ஓட்டல்கள், ரெஸ்டாரன்டுகளில் வீணாகும் எண்ணெய் கழிவுகளைப் பயன்படுத்தி புதிய தளஓடுகள் தயாரிக்கப்பட்டன. அவை வெயில் காலத்தில் சூரிய ஒளியை எதிரொளித்து வீட்டுக்குள் குளிர்ச்சியை பரப்புகிறது. அதேபோல் குளிர் நடுங்க வைக்கும் காலங்களில் குளிரை கிரகித்துக் கொண்டு வீட்டுக்குள் வெதுவெதுப்பான சூழலை பரப்புகிறது.
இதனால் வீடு எப்போதும் வசந்த மாளிகையாகவே இருக்கும். “இந்த கூரை ஓடுகள் அமைக்கப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் வாழ்வில்புதுமையை உணர்வார்கள். வீட்டுக்குள் நிலவும் இதமான சூழல் அவர்களுக்கு `எனர்ஜி டானிக்`காக இருக்கும்” என்கிறார்கள் நவீன கூரை ஓடு வடிவமைப்பாளர்கள்.

சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி ; விஞ்ஞானிகள் தகவல்!

 கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.இந்நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியிலிருந்து உற்பத்தி ஆவதாக கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு முன்பு என்செலாடஸ் சந்திரனில் இருக்கும் ஐஸ் படிவங்களை நாசா விண்வெளி மையத்தின் காசினி விண்கலம் போட்டோ எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஐஸ் கட்டியில் அதிகளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையிலான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே இங்கு உப்பு நீர் ஏரி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த உப்பு படிவங்களில் 30 சதவீதம் என்செலாடஸ் சந்திரனின் நீரூற்றுகளில் உள்ளது. நீரூற்றுகள் 2 ஏரிகளில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று என்செலாடஸ் மேற்பரப்பின் அருகே அமைந்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் பெரியதாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்’ என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்கள் 2031 ஆம் ஆண்டில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஷ்யன் அகாடமி ஆப் சயின்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டியூட்’ இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் என்ற ரஷ்ய விஞ்ஞானி கூறியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகள் சம்பந்தமான ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன.

பூமியில் மோதும் கற்களால் பாதிக்கும் நாடுகள்!


விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் மிகுந்த அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், பிலிபைன்ஸ், இத்தாலி, பிரிட்டன்,
பிரேசில், நைஜிரியா ஆகிய நாடுகள் இந்த சிறு கோள்களின் தாக்குதலுக்கு உள்ளானால் அங்கு மிகுந்த உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதினால்ல் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றிலும் அழிவுக்கு உள்ளாகும் என்வும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை 
விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் மிகுந்த அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், பிலிபைன்ஸ், இத்தாலி, பிரிட்டன்,
பிரேசில், நைஜிரியா ஆகிய நாடுகள் இந்த சிறு கோள்களின் தாக்குதலுக்கு உள்ளானால் அங்கு மிகுந்த உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதினால்ல் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றிலும் அழிவுக்கு உள்ளாகும் என்வும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றாக அழிந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
விடுக்கின்றனர்.இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றாக அழிந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

நரம்பு மண்டல அதிசயம்!

 
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.
மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.
காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.
மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.
அதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.
தன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல் களில் அடங்கும்.
பொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.
இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.
நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.
நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.
இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.

நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு

விண்வெளியில் அதிக சக்தி வாய்ந்த கருந்துளைகள் உள்ளன. இவை தங்களுக்கருகில் இருக்கும் அனைத்தையும் உள்ளிழுத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை. தற்போது அத்தகைய கருந்துளைகளில் ஒன்று நட்சத்திரம் ஒன்றை சிதறடித்து பின் தனக்குள்ளே உள் வாங்கிய அரிய நிகழ்ச்சியை வானியலாளர்கள் முதன் முறையாக கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்துள்ள இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு கண்டறியப்படாதது. பொதுவாக கருந்துளைகளின் மையம் சூரியனைப்போன்று 100 கோடி மடங்கு அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது நடைபெற்ற நிகழ்வில், கருந்துளையானது தன்னிடமிருந்து 3.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த நட்சத்திரத்தை, அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் ஜெட் எனப்படும் தனிப்பட்ட சக்தியால் சிதறடித்து பின் தன்னுள் இழுத்து கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஒளி வெள்ளம் அதனை படம் பிடித்த நாசாவின் ஸ்விப்ட் தொலைநோக்கிக்கு அடுத்த ஒரு வடருடத்திற்கு தேவையான ஒளியை வழங்குமளவிற்கு பிரமாண்டமாய் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளியில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து எக்ஸ் கதிர்களின் அலைவீச்சு அடிக்கடி நிகழ்ந்து வந்ததையும் ஸ்விப்ட் தொலைநோக்கி அவ்வப்போது நாசாவிற்கு தெரிவித்து வந்தது. அதனை தொடர்ந்து ஆராய்ந்ததில் இந்த அரிய நிகழ்வு தற்போது உலகிற்கு தெரிய வந்துள்ளது. மற்றும் நட்சத்திர மண்டலத்தில் 100 மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற நிகழ்வு நடைபெறும் என பென்சில்வேனியா மாநில பல்கலைகழகம் மற்றும் ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் வானியல் அமைப்பு ஆகிய குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.